359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This