போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.
சந்தேக நபர் ஆறு போலி 100 டொலர் தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ரஸ்நாயக்கபுராவில் வசிக்கும் 45 வயதுடையவர், இந்நிலையில், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.