நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை

நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை

நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு அதிபர் முகமது முய்சு உலக சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலகில் மிக நீண்ட செய்தியாளர்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 15 மணி நேரம் (14 மணி நேரம் 54 நிமிடங்கள்) நீடித்ததாகவும், மேலும் ஜனாதிபதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன் வசம் வைத்திருந்த சாதனையை மாலைத்தீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This