பிரித்தானியாவின் கும்ப்ரியாவில் ரயில் தடம் புரண்டது – அவசர சேவைகளுக்கு அழைப்பு

பிரித்தானியாவின் கும்ப்ரியாவில் ரயில் தடம் புரண்டது  –  அவசர சேவைகளுக்கு அழைப்பு

கும்ப்ரியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர சேவைகளக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நகரின் வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

பென்ரித் மற்றும் ஆக்சென்ஹோம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்னர் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டதாக ரயில் நிறுவனமான Avanti West Coast தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில்,

பென்ரித் நார்த் லேக்ஸ் மற்றும் ஆக்ஸன்ஹோம் லேக் மாவட்டம் இடையே ரயில் தடம் புரண்டதால், அனைத்து வழித்தடங்களும் தடைபட்டுள்ளன.

அதனால், இன்று பிரஸ்டனுக்கு வடக்கே பயணிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வடமேற்கு அம்பியூலன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: “கம்ப்ரியாவில் உள்ள ஷாப் அருகே ரயில் தடம் புரண்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அம்பியூலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு பதிலளிப்பு குழுக்களை அனுப்பியுள்ளது.

நாங்கள் தற்போது நிலைமையை மதிப்பிட்டு, அவசர சேவைகளின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை விரைவில் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை – என்றும் தெரிவித்தது

Share This