மோடியின் இலங்கை வருகையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மோடியின் இலங்கை வருகையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது பாதுகாப்பு, எரிசக்தி இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளது.

புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் 6 வஆம் திகதிவரை இலங்கைக்கு செல்வார். ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை அவர் இலங்கை செல்வார்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார். சம்பூர் சூரிய சக்தி திட்டத்தின் அடிக்கல் இந்த பயணத்தில் நாட்டப்பட உள்ளது. இந்த பயணத்தில் பல புரிந்துணவர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படும்.   குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் புரிந்துணவர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்.

பிரதமர் மோடி அநுராதபுரத்திற்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.  அங்கு ஜெய ஸ்ரீ மகா போதியில் நடைபெறும் மத அனுஷ்டானங்களிலும் கலந்துகொள்வார்.  அநுராதபுரத்தில், அவர் சில இந்திய நிதியுதவி திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளபார் என்றும் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

Share This