மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிப்பு

மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டம் நடைமுறைக்கு வந்த பின், செப்டெம்பர் 24 அன்று ஜனாதிபதி செயலாளர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களையும் திருப்பி கையளிக்குமாறு அறிவித்ததாக மனோஜ் கமகே கூறினார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மனோஜ் கமகே எச்சரித்துள்ளார்.

“அடுத்த வாரம், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு தேவையான வாகனங்களை பெறுவதற்கான கோரிக்கையை முன்வைப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.

Share This