மகிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (11) ஒரே நேரத்தில் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உபதலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
தற்போது மிக குறைவான பாதுகாப்பு உத்தியோகத்தர்களே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீக்கப்பட்ட 116 பாதுகாப்பு அதிகாரிகளுள் பிரபுக்களின் பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் என்றும் அவர் கூறினார்.