21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள உள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
