லாப் எரிவாயு விலை திருத்தம் – வெளியானது அறிவித்தல்

லாப் எரிவாயு விலை திருத்தம் – வெளியானது அறிவித்தல்

2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதமும் லாஸ் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் அறவிடப்பட்டுவரும் லாப் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோ கிராம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 4,115 ரூபா.

5 கிலோ கிராம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபா.

Share This