
புத்தாண்டை சிறப்பாக வரவேற்க லண்டன் பிக் பென் கடிகாரம் தயார் நிலையில்
2026ஆம் ஆண்டை வரவேற்பதற்காக லண்டன் பிக் பென் கடிகாரம் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புத்தாண்டை வரவேற்பதில் உலகின் பல கோடிகணக்கான மக்களின் கவனத்தை திருப்பும் இடங்களில் ஒன்றாக லண்டன் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிக் பென் கடிகாரம் உள்ளது.
நாளை 31ஆம் திகதி, நள்ளிரவு 12 மணிக்கு பிக் பென் கடிகாரத்தில் மணி ஒலிக்கும்போது, பழைய ஆண்டை வாழ்த்தி விட்டு, புதிய ஆண்டை வரவேற்கும் அந்த சத்தம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கும் என கூறியுள்ள அரசாங்கம், இந்தத் தருணத்தை தொலைக்காட்சி மற்றும் இணையவழி நேரலை ஒளிபரப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கலாம் என்றும் தெரிவித்தள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அனுபவமிக்க பராமரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவால் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
வானிலை பாதகமாக இருந்தாலும் கூட பிக் பென் கடிகாரம் புத்தாண்டு பிறப்பை சிறப்பாக வரவேற்கும் வகையில் பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
