உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது.

நேற்று 24ஆம் திகதி முதல்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.

அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This