போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து மருந்துகளை பெற்றவர்களின் பட்டியல் விரைவில்

போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து இராணுவ வைத்தியசாலையில் அதிக அளவிலான மருந்துகளை பெற்றவர்களின் பட்டியலை வெகு விரைவில் அரசாங்கம் வெளிப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்களை எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
கடந்த அரசாங்கங்களின் போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களுக்கு இடையிலான உறவுமுறை மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.