உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெஸ் (Henley Passport Index) என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் சிங்கப்பூர்தான் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பிரஜைகள் தமது கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இரண்டாம் இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் பட்டடியலிடப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு இந்தப் பட்டியில்ல பிரித்தானியா 8ஆவத இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு ஒரு படி முன்னேறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )