மக்களுக்குப் பொறுப்புக்கூறும், பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் – சஜித் அழைப்பு

 மக்களுக்குப் பொறுப்புக்கூறும், பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் – சஜித் அழைப்பு

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்களையும், பொறுப்புக்கூறக்கூடியவர்களையும், நேர்மையானவர்களையும், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்களையும், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களையே எதிர்பார்க்கிறார்கள். மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு மக்கள் எதிர்பார்ப்புக்கு பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்ற “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

சம்பிரதாய மாநகர சபை சேவைக்கு அப்பால் சென்று முழு மக்களுக்கு பெறுமதி சேர்க்கும் சேவையை கொழும்பு நகருக்குப் பெற்றுத் தருவோம். சுகாதாரரம், கல்வி, வீட்டுக் வசதிகள், மற்றும் பொது வசதிகளை புதிய தொழில்நுட்பத்துடன் திறம்பட, வேகமான சேவையை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆட்சியை கொண்டு வருவோம். தொழில்முயற்சியின் ஊடாக நகரை கட்டியெழுப்புவோம்.

ஊழல், மோசடி அல்லது திருட்டு இல்லாமல் எந்தவொரு குடிமகனும் கேள்வி கேட்கக்கூடிய, எந்தவொரு நபருக்கும் தகவல் அறியும் உரிமையை வழங்கும், குடிமக்கள் பங்கேற்பை அதிகரிக்கும், தூய்மையான ஆட்சியை முன்னெடுப்போம். மகிழ்ச்சி நிறைந்த நகரத்திற்காக அனைவரும் அணிதிரள வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் கொழும்பு குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நனவாகும் சமூக உடன்படிக்கை வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் தலைமையில் இன்று முன்வைக்கப்படுகிறது. இதன் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் உண்மையான மாற்றம் ஏற்படும் எனறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Share This