கொழும்பை கைப்பற்ற சஜித் அணிக்கு இடமளியோம் – பிமல் ரத்நாயக்க

கொழும்பை கைப்பற்ற சஜித் அணிக்கு இடமளியோம் – பிமல் ரத்நாயக்க

கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சஜித் அணியினருக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையை கைப்பற்றினால் நாட்டின் முழு அதிகாரமும் தங்கள் வசம் வரும் என்ற எண்ணத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி சிறுபிள்ளைத்தமாக செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில், அதிக ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும், அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என அவர் கூறியுள்ளார். இதற்காக பல சுயேட்சை குழுக்களின் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியது. எந்தவொரு கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், ஏனைய சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் மும்முரமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This