நாமலின் நரி நாடகம் வெறும் கனவு மாத்திரமே – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

” தனது தந்தையின் முதுமையைக்கூட அரசியல் இருப்புக்காக நாமல் ராஜபக்ச பயன்படுத்திவருகின்றார். அனுதாபம்மூலம் அரயணையேறும் நாமலின் நரி நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மஹிந்த ராஜபக்சவுக்கு போதுமானளவு சொத்துகள் உள்ளன. கடந்த காலங்களில் சட்டவிரோதமாகவும் சொத்துகளை திரட்டினார்கள். நாடு முழுவதும் சொத்துகள் குவிந்து கிடக்கின்றன.
எனினும், தற்போது மாளிகையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நரி நாடகம் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.
போரை முடிவுக்குகொண்டுவந்ததால் மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கு ஓரளவேனும் கௌரவம் இருந்திருந்தால், அந்த கௌரவமும் தற்போது இல்லாமல்போயுள்ளது.
எனவே, நரி நாடகங்களை அரங்கேற்றி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை நாமல் புரிந்துகொள்ள வேண்டும்.
வயோதிப நிலையில் இருக்கும் தனது தந்தையை தனது அரசியல் தேவைக்காக நாமல் பயன்படுத்துகின்றார்.” – என்றார் பிரதி அமைச்சர்.