லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் சிக்கிய சிறுத்தைப் புலி

லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் சிக்கிய சிறுத்தைப் புலி

லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் உள்ள மரக்கறித் தோட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை புலி, நேற்று காலை 45 நிமிட நடவடிக்கையின் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை புலி சிக்கியிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, நுவரெலியா வனவிலங்கு அலுவலகம் மற்றும் ரந்தெணிகல கால்நடை மருத்துவர்கள் சகிதம் லிந்துலை பொலிஸார் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுமார் இரண்டு வயதுடையது எனக் கருதப்படும் இந்த சிறுத்தைப் புலி, மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னர் பொறியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

புலிக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக அது ரந்தெணிகல கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை காயமடைந்த சிறுத்தை புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனபகுதிக்கு விடவிருப்பதாகவும் காயங்களுக்கு உள்ளான சிறுத்தை புலி நலமாக இருப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

Share This