
லீசெஸ்டர்ஷயர் கொலை சம்பவம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
வடமேற்கு லீசெஸ்டர்ஷயரில் கிராமப்புற களியாட்ட விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 66 வயதான நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
