12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு

12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் கோரியுள்ளது.

இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்துள்ள போதிலும், பல வேட்பாளர்கள் இன்னும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

காலக்கெடுவைக் கடைப்பிடிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஏழு பேருக்கு எதிராக ஏற்கனவே  சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This