கசிப்பு விற்பனை – இருவர் கைது

கசிப்பு விற்பனை – இருவர் கைது

கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுப்பட்ட இருவரை மீதும்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 157500 மில்லி லீற்றர் கோடாவும் 2250 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மீதும்பிட்டிய பகுதியை சேர்ந்த 36, மற்றும் 56 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை மீதும்பிட்டி பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கசிப்பு விற்பனையிலும் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம். பியரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் 38118 சாஜன் உபுல், 39315 சாஜன் நிரஞ்சன்,68558 சாஜன் சமில், மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் வீட்டின் பின்புறத்தில் கசிப்பு உற்பத்திக்காக பரல் ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கோடாவும் பரலும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சந்தேக நபர்களுக்கு எதிராக பசறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பசறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த பகுதிகளில் பாரிய அளவில் கசிப்பு காணப்படுவதாகவும் விடுமுறை தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் வேறு பகுதிகளில் இருந்து கசிப்பு குடிப்பதற்காக அதிக அளவில் நபர்கள் வருவதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் பாடசாலை மாணவர்கள் படிப்பதற்கும் இடையூறு ஏற்படுவதாகவும் புதிய அரசாங்கம் இது சம்பந்தமாக கவனம் செலுத்தி கசிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share This