வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு

வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு

வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, உருகுவே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையின் ஊடாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், இறையாண்மை கொண்ட ஒரு நட்டின் இயற்கை வளங்கள் அல்லது நிர்வாகத்தை வெளிநபர்கள் கையகப்படுத்தும் எந்தவொரு முயற்சியை எதிர்ப்பதாகவும் குறித்த நாடுகள் அறிவித்துள்ளன.

அத்துடன், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அமைதிக்கும் பிராந்திய பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. அவை பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன என்றும் குறித்த நாடுகள் தமது கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )