லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருநு்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரேதுப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This