வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஏராளமான தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஏராளமான தொலைபேசிகள் மீட்பு

முன்னாள் அமைச்சர்கள் குழு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் விடுதி ஒன்றில் இருந்து ஏராளமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ, எஸ்.எம். ரஞ்சித் மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் தற்போது அந்த விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட பொருட்களில் ஸ்மார்ட்போன்கள், தொலைபேசி சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன் பாகங்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )