
மண்சரிவு அபாயம் – கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தாகல பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தில்
ஹட்டன், ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ருவன்வெல்ல ரத்தாகல பகுதியில் உள்ள 11 குடும்பங்களை ரத்தாகல ஆரம்பப் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட்டவளையில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றி வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
