12 வருடங்களுக்குப் பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்

12 வருடங்களுக்குப் பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்

கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டில் மங்களகரமான ராஜயோகம் மீன ராசியில் உருவாகவுள்ளது.

அதாவது, புதனும் சுக்கிரனும் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகம் அடுத்த வருடம் பெப்ரவரி 27 ஆம் திகதி உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எனப் பார்ப்போம்.

மிதுனம்

மிதுனத்தின் 10 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்பத்தின் 2 ஆம் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகவுள்ளதால் திடீர் பணவரவு ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். எளிதில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.

Share This