பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இன்று (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.