தொழிலாளர் பற்றாகுறை – தற்காலிக வேலை விசாக்களை வழங்க தயாராகும் பிரித்தானியா

தொழிலாளர் பற்றாகுறை – தற்காலிக வேலை விசாக்களை வழங்க தயாராகும் பிரித்தானியா

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தற்காலிக வேலை விசாக்களுக்கான 82 வேலை வகைகளை பிரித்தானியா பட்டியலிட்டுள்ளது.

இந்த விசாக்கள் அரை திறமையான வேலைகளுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கி, கருத்துக் கணிப்புகளில் பின்தங்கிய பின்னர், குடியேற்றச் சட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சித்துள்ளார்.

அதே நேரத்தில், பிரித்தானியா மந்தமான பொருளாதாரத்தையும் சில துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது.

இந்நிலையில், பட்டப்படிப்புக்குக் குறைவான தகுதிகளைக் கொண்ட வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் தேடும் பணிக்கான தெரிவு பட்டியலில் உள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள், வெல்டர்கள், புகைப்படக் கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தளவாட மேலாளர்கள் போன்ற தொழில்கள் இந்த பட்டியலில் அடங்கும்.

தகுதி பெறுபவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். இருப்பினும், அரசாங்கக் கொள்கைகள் மாறாவிட்டால், அவர்கள் நாட்டில் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆங்கில மொழியையாவது அறிந்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்த விரிவான திட்டத்தையும் தொழில் வழங்குபவர் சமர்ப்பிக்க வேண்டும்.

சேர்க்கப்பட வேண்டிய தொழில்களின் இறுதிப் பட்டியல் இரண்டாம் கட்ட மதிப்பாய்வில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கனடாவும், அவுஸ்திரேலியாவும் இதேபோன்ற அணுகுமுறையைப் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This