கொத்மலை வீ.டி.எம். ஆடைதொழிற்ச்சாலையின் உழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொத்மலை வீ.டி.எம்.ஆடைதொழிற்சாலையின் உழியர்கள் 10.12.2024 செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 5000ம் ருபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தமக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தைில் மேலும் ஜந்தாயிரம் ருபாயினை அதிகரித்து தருமாறு கோரி கடந்த எழு நாட்கலாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நாங்கள் கோரிய 5000ம் ருபாயினை தமக்கு வழங்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று அரிசி முதல் தேற்காய் வரை அனைத்து பொருட்களும் விலை அதிகிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு தேவைப்படுகின்ற அனைத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் நாங்கள் ஒரு போதும் தொழிற்சாலையை ழூடுமாறு கூறவில்லை. ஆனால் இவர்கள் தொழிற்சாலையினை ழூடி எங்களை வெளியில் அனுப்பியுள்ளனர் பஞ்சர் இயந்திரத்தை நிருத்தி வைத்து கொண்டு எங்களை தொழிற்சாலையின் உள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.
எமக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய உணவுகளை கூட வழங்குவதில்லை இதேவேளை ஆடைதொழிற்சாலையின் வளாகத்தில் பொலிஷார் பாதுகாப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் எனவே எது எவ்வாராக இருப்பினும் தமக்கு ஜந்தாயிரம் ருபாய் அதிகரிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்