கோலியின் ஓய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – ரவி சாஸ்திரி

கோலியின் ஓய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – ரவி சாஸ்திரி

உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சரியான நேரத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கோலி தன்னுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியதாகவும், கோலியின் சில அறிக்கைகள் அந்த முடிவு சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஎஸ்பின் இடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோலி தலைவராக இருந்த காலத்தில் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார், மேலும் இந்த முடிவு குறித்து கோலிக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் ரவி சாஸ்திரி கூறுகிறார்.

இந்நிலையில், இந்தியாவிற்கும், ஒருநாள் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட்டிற்கும் கோலி இன்னும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share This