300வது ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் குழு நிலை போட்டியின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்மாகி இடம்பெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.
இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், போட்டியின் முடிவு இரு அணிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்ற இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த போட்டியை வெல்லும் மனநிலையுடன் களமிறங்கியுள்ளன.
இதற்கிடையில், இந்திய நட்சத்திர துடுப்பாட்ட விராட் கோலி இன்று தனது 300வது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றார்.
2008 முதல் 2025 வரை இந்தியாவுக்காக 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 14,085 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவுக்காக 300 போட்டிகளில் விளையாடும் ஏழாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.