டெல்லி அணியின் தலைமை பொறுப்பை ஏற்க கே.எல்.ராகுல் மறுப்பு

டெல்லி அணியின் தலைமை பொறுப்பை ஏற்க கே.எல்.ராகுல் மறுப்பு

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லி அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கே.எல்.ராகுல் அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அணியில் துடுப்பாட்ட வீரராக தொடர்வதற்கு அவர் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், டெல்லி அணியின் தலைவராக அக்சர் பட்டேல் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.எல்.ராகுல் கடந்த காலங்களில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளின் தலைவராக செயற்பட்டிருந்தார். எனினும், அந்த அணிகளால் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை.

எனினும், ராகுல் தலைமையிலான லக்னோ அணி 2022ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு லக்னோ அணி ஐபிஎல் தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை. ஒருபோட்டியின் போது அணியின் உரிமையாளர் ராகுலை மைதானத்தில் வைத்து ஏசிய காணொளி வைரலாகியிருந்தது.

இதனால் அந்த அணியில் இருந்து வெளியேறிய ராகுல், தற்போது டெல்லி அணியால் 18 கோடி ரூபாவிற்க ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். அவர் அணியில் தலைவராக நியமிக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது தலைவர் பதவியை நிராகரித்துள்ளார்.

“அணியை சரியாக வழி நடத்துகிறேன். அணியின் வெற்றிக்கு சிறந்த முறையில் பங்காற்றுகிறேன். நான் தலைவராக சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டால், அந்தப் பணியை நான் தொடர்வதில் ஒரு நியாயம் இருக்கின்றது.

எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் என்று என்பதெல்லாம் இல்லை. அணியில் ஒரு அங்கமாக இருந்தாலே எனக்கு போதும்.” “ஒரு அணியில் இருக்கும் போது நாம் மகிழ்ச்சியாகவும், நாம் நல்ல சூழலில் இருக்கின்றோம் என்ற தோன்ற வேண்டும்.

அனைவரும் வெற்றிக்காக ஒருங்கிணைந்து பயணிக்கின்றோம் என்ற நினைப்பிருக்க வேண்டும்.அப்படி ஒரு அணி இருந்தால் எனக்கு போதும்” என்று ராகுல் கூறியிருக்கிறார்.

Share This