
புற்றுநோயிலிருந்து மீண்டுவரும் மன்னர் சார்லஸ்
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னர் தமக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்திருந்தார்.
மன்னர் சார்லஸ் புற்றுநோயின் அபாய கட்டத்திலிருந்து மீண்டுள்ளதுடன், அவரது நோய் தன்மை மிகவும் நேர்மறையான கட்டத்தை எட்டியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மன்னர் முழுமையாக குணமடைந்துவிட்டவில்லை எனக் கூறியுள்ள பக்கிங்ஹாம் அரண்மனை, சிகிச்சைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படுள்ளதால் அவர் அபாயக் கட்டத்திலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளது.
மன்னர் சார்லஸ் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளதுடன், “புற்றுநோய் கண்டறிதல் எவ்வளவு அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து நான் அறிவேன். ஆனால் ஆரம்பகால கண்டறிதல் சிகிச்சையின் போக்கை முற்றிலுமாக மாற்றி மருத்துவக் குழுக்களுக்கு மதிப்புமிக்க நேரத்தை வாங்க முடியும் என்பதை நான் அறிவேன்,” எனக் கூறியுள்ளார்.
