2025 இல் சிம்மத்துக்கு செல்லும் கேது…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்
ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
மிதுனம்
திடீரென பணம் கைக்கு வரும். தன்னம்பிக்கை அதிகமாகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில் தனி அடையாளம் உருவாகும். நற்செய்திகள் தேடி வரும்.
விருச்சிகம்
கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும். தொழிலில் பல நன்மைகள் கிடைக்கும்.
தனுசு
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகம். பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.