
கெஹலியவின் கோரிக்கை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்ககமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திக நிராகரித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
