கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம்

வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையத்தினை அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.