
கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
