சயிப் அலிகான் மீது கத்தி குத்து…வருத்தம் தெரிவித்த கரீனா கபூர்
பிரபல பொலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறிருக்க சயிப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் இச் சம்பவம் தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த நாள் நம்பமுடியாத அளவுக்கு சவாலாக எமது குடும்பத்துக்கு இருந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.