கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

பாதாள உலக்குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அவரது ஓட்டுநரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (24) அனுமதி வழங்கினார்.
சந்தேக நபர்கள் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதால், பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு சமர்ப்பித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சட்டத்தரணியாக வந்த பெண் சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.