கனேமுல்ல சஞ்சீவ கொலை – தொடரும் தீவிர விசாரணைகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலை – தொடரும் தீவிர விசாரணைகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின்  கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் துப்பாக்கிதாரியும், சந்தேகநபரான பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பஹா, மல்வத்து, ஹிரிபிட்டிய பகுதியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தையும் கொழும்பு குற்றப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சடலம் நேற்று (20) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் நேற்று பிற்பகல் சடலத்தின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில், அவரது மூத்த சகோதரி உடலைப் பெற வந்திருந்தார்.

CATEGORIES
TAGS
Share This