
கண்டி மாநகர சபை நடைபாதை வியாபாரிகளை அகற்ற தீர்மானம்
கண்டி மாநகர சபை டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நகரில் உள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பணம் செலுத்தும் வியாபாரிகளை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு அனுதாப அடிப்படையில் டிசம்பர் 31 ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டதாகவும் கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடங்களில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் நடைபாதைகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, கண்டி நகரில் சுமார் 500 அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகளும், இன்னும் பலர் மாற்று இடங்களில் நிலம் பெறும் நம்பிக்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக நகராட்சி மன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
