கடுகண்ணாவை மண்சரிவு -ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை

கடுகண்ணாவை மண்சரிவு -ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை

கடுகண்ணாவை, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள வீதியின் ஒரு பகுதியை ஓரிரு நாட்களில் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த விடயம் மிகவும் பாரதூரமாக உள்ள நிலையில் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடுகண்ணாவை, கனேதென்ன மண்சரிவு இடம்பெற்ற பகுதியை பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக கொழும்பு – கண்டி வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This