நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சஜித்

நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியான விசாரணையை கோருகின்றனர். எனினும், நிலைமை தற்போது பாரதூரமாகியுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் கலந்துரையாடலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை, ஹ{ம் தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

 

Share This