குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார்.

இது இந்த மாதத்தின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக இருக்கும். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அறிவாற்றல், ஆன்மீகம், குழந்தைகள், திருமணம் மற்றும் செல்வத்தின் காரணி கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே 14 ஆம் திகதி மிதுனத்தில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாகும்.

இந்நிலையில், கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார். இது இந்த மாதத்தின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக இருக்கும்.

மிதுனத்தில் குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

மேஷம்:

குரு உதயத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கடவுள் அருளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஆளுமை மேம்படும், இதன் காரணமாக உங்கள் அறிவாற்ற்ல் பிறரால் அடையாளம் காணப்படும். பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

குரு உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பழைய முதலீடுகளிலும் இப்போது லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரம் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுடன் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும், எதிர்பாராத லாபம் அல்லது போனஸ் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்கு, மிதுன ராசியில் குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் குரு உதயம் உங்கள் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்தும். இந்த நேரத்தில் ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அண்டை வீட்டாருடன் அல்லது சமூக வட்டத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். நீதி, கல்வி, மதம் அல்லது நிர்வாகத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். முடிந்தால், தொடர்ந்து ஒரு கோவிலுக்குச் செல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு குரு உதயம் மிகவும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த வேலை திடீரென்று வேகம் பெறும். குடும்ப ஆதரவு மற்றும் சமூக கௌரவம் அதிகரிக்கும்.பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் உங்களுக்கு சில சிறப்புப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம்.

கும்பம்:

குரு உதயத்தின் தாக்கத்தால் கும்ப ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

மனித வாழ்வில் பல வித செல்வங்களையும் பெற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, திருமண வாழ்வில் இன்பம் கண்டு, குழந்தைச் செல்வத்தின் இன்பம் பெற்று மகிழ்சியாக இருக்க, ‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ” என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

Share This