டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது JICA

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது JICA

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது.

நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் அவர்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான பல்வேறு அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் இதில் அடங்குவதோடு, 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 மெத்தைகள், 20 Plastic Sheets (Tarpaulin), 200 சிறிய நீர் கொள்கலன்கள் (ஜெரி கேன்கள்) மற்றும் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இதில் அடங்குகின்றன.

இந்தப் பொருட்கள் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )