
ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
