ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 இலட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூபாய் 2 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

 

Share This