தனது சம்பளப் பட்டியலை வெளியிட்டார் ஜகத் விதான எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு கொடுப்பனவு ரூ.5,000, அலுவலக கொடுப்பனவு ரூ.100,000, எரிபொருள் கொடுப்பனவு ரூ.97,428.92 மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ரூ.15,000.
அவரது நிகர சம்பளம் ரூ.317,760. 39. சம்பளப் பட்டியலின்படி, மாதாந்திர விலக்குகளில் கேட்டரிங் கட்டணமாக ரூ.1,200, தனிநபர் வருமான வரியாக ரூ.3,728.53 ஆகியவை அடங்கும், மேலும் ரூ.25 முத்திரைக் கட்டணமாக கழிக்கப்படுகிறது.
ஜகத் விதான எம்.பி.யை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டபோது, அவர் தனது முழு சம்பளத்தையும் சமூகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதால் சம்பளப் பட்டியலை வெளியிட முடிவு செய்ததாகக் தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு தொழிலதிபர் என்பதால் எனக்கு சம்பளம் தேவையில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.