யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஏ9 வீதியில் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This