யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்
காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த கப்பல்களை முன்னெடுக்கும் சிவகங்கை கப்பல் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) தொடங்கிய கப்பல் சேவையானது ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீளவும் கப்பல் சேவை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இருக்கைகளை முன்பதிவு செய்ய கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணக் கட்டணமாக 35,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கப்பல் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.