யாழ். மந்திரி மனை புனரமைப்பு

யாழ். மந்திரி மனை புனரமைப்பு

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ்.மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அண்மையில் கூட இது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து பொது மக்கள் கவலையடைந்திருந்ததுடன், தொல்பொருள் சின்னமான இதனை புனரமைத்து பாரம்பரியத்தை பேணுமாறும் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இதன் புனரமைப்பு பணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக இன்றையதினம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )